திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாதன் மகள் திருமணம் – காங்கேயம் முழுவதும் தொண்டர்கள் கூட்டம் நிரம்பியது.

திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாதன் மகள் திருமணம் – காங்கேயம் முழுவதும் தொண்டர்கள் கூட்டம் நிரம்பியது.

தங்கதமிழன்
0

 திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாதன் மகள் திருமணம் காங்கேயத்தில் நடைபெற்றது. மகாராஜா மஹாலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு காங்கேயமே மக்கள் கூட்டத்தால் நிரம்பியது.

திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல்லத் திருமண விழா காங்கேயம் கண்டிராத லட்சக்கணக்கான தொண்டர்கள்

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ .சாமிநாதன் அவர்கள் மணமக்களை வாழ்த்திய தருணம்



திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நான்காம் மண்டல பொறுப்பாளருமான பத்மநாதன் அவர்களின் மகள் திருமண நிகழ்ச்சி காங்கேயத்தில் விமரிசையாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சி காங்கேயத்தில் உள்ள மகாராஜா மஹாலில் நடைபெற்றது.

தி.மு.க. நிர்வாகிகள பலரும் கலந்து கொண்ட தருணம்



இந்த நிகழ்ச்சிக்கு திமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் பெரும் மக்கள் திரள் காணப்பட்டது.


முக்கியமாக திமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்து கொண்டதால் காங்கேயம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களால் நகரின் பல முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இளைஞர் கள் அணிஅணியாய் கலந்துகொண்டவர்கள்

Also read :பூக்கிபடத்தின்,'புடிக்கலே புடிக்கலே'வைரலாகும் பாடல்




திருமண நிகழ்ச்சி நடைபெறும் மகாராஜா மஹாலை சுற்றிய பகுதிகளில் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், காங்கேயத்தில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காங்கேயம் முழுவதும் இந்த திருமண நிகழ்ச்சி பேசுபொருளாக மாறியது.


பத்மநாதன் குடும்பத்தின் சார்பில் வருகை தந்த அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சி சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றதாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to improve your browsing experience and provide personalized content. By continuing to use our site, you agree to our use of cookies. Learn More
Ok, Go it!