உண்மையான நண்பன்
![]() |
| உண்மையான நண்பன் |
என்னை யாருக்கும் பிடிக்கவில்லை.
என் முகத்தை எனக்கே பிடிக்காத போது,
மற்றவர்களுக்கு எப்படி பிடிக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் ஒருநாள்,
என்னை யாராவது ஒருவர் உண்மையாக நேசிப்பார்கள்,
என் மேல் பாசம் பொழிவார்கள் என்று
என்னுள் ஒரு நம்பிக்கை இருந்தது.
அதற்காக எல்லா மனிதர்களிடமும்
அன்பாக பழகத் தொடங்கினேன்.
ஆனால் மனிதர்கள் வித்தியாசமானவர்கள்.
ஒரு நாள் பாசமாக இருப்பவர்கள்,
மற்றொரு நாள் பார்க்காமல் போகிறார்கள்.
ஒரு வாரம் நண்பனாக இருந்தவர்கள்
அடுத்த வாரம் அதேபோல் இருப்பதில்லை.
நண்பனாக பழகியவர்கள் பலர்
ஒரு சந்தர்ப்பத்தில் ஏமாற்றினார்கள்,
சிலர் துரோகம் கூட செய்தார்கள்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு
உண்மையான நட்பை தேடுவது
என்னுள் கோபத்தையும் வெறுப்பையும் அதிகரித்தது.
“எனக்காக யாரும் இல்லை” என்று நினைத்து
யாரிடமும் அன்பாக பழக வேண்டாம்
என்று முடிவு செய்தேன்.
அந்த நேரத்தில்
ஒருவர் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார்.
“நீ தேடும் உண்மையான நண்பன்
உன்னை ஒருபோதும் கைவிட மாட்டான்.
துரோகம் செய்ய மாட்டான்.
அவன் இதற்குள்ளே இருக்கிறான்,” என்றார்.
ஆவலுடன் அந்த பரிசை திறந்தேன்.
அதற்குள் இருந்தது —
ஒரு கண்ணாடி.
அப்போது தான் புரிந்தது…
நான் இத்தனை நாட்கள் தேடிய
உண்மையான நண்பன்
நானே.

0 கருத்துகள்