பணம் இல்லை என்றால்? கட்டாகும் காதல்கள்

 பணம் இல்லை என்றால்?

ஆப்பு வைக்கும் பெண்கள்


அன்பு எல்லோருக்குள்ளும் இருக்கிறது 

ஆனாலும் 

அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை 

இங்கே 

அன்புக்காக 

யாரும் 

அன்பு காட்டுவதில்லை 

அதனால்தான் நான் மனிதர்களிடத்திலே 

பழகும் போது 

பயப்படுகிறேன் 

நாயை கண்டோ 
நரியைக் கண்டோ
பாம்பை கண்டோ
யானையைக் கண்டோ
இன்னும் எத்தனை மிருகங்கள் இருந்தாலும் அவைகளை கண்டு நான் பயந்ததில்லை


மனிதர்களை கண்டு தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது 

அவர்களிடம் அன்பாக பழக 
இன்னும் எனக்கு கொஞ்சம்
 பயம் அதிகமாகத்தான் ஆகிறது

அந்த பயம் எனக்கு சிறிய வயதில் இருந்தே வந்துவிட்டது
 
அது எப்படி வந்தது என்றால் 


நினைவு தெரியும் சிறிய வயது 

ஒரு ரூபாய் பணத்தை பாக்கெட்டில் 
அடிக்கு ஒரு தரம் தொட்டு பார்த்துக் கொண்டே 

இன்டெர்வல் பெல்லுக்காய் காத்துக் கொண்டிருக்கும் 

சின்ன பையனா இருக்கும்போது 

பத்து குடல்கள் வாங்கி 
பத்து விரல்களிலும் கோர்த்து 
திண்ணத் தொடங்கும் வேளையில் 
நண்பன் ஒருவன் எனக்காக காத்திருப்பான் 

பாதி குடல்களை அவனும் நானும் பங்கிக் கொண்டோம் 

அவனிடம் காசு இருக்கும் போது 

அவன் தெரியாமலே எனக்கு 
கொடுக்காமலே வாங்கி தின்பான்


இப்படி என்னிடம் பணம் இருக்கும்போது மட்டுமே 
என்னிடம் அன்பு காட்டும் நண்பன் சிறிய வயதிலே என்னிடம் வந்து விட்டான் 

ஆம் அப்போதே எனக்கு பயம் வரத் தொடங்கி வட்டது
 

அதற்குப் பிறகு காதலும் 

என்னை அவளுக்கு பிடித்திருப்பதாக தான் சொன்னாள் 

உன் நல்ல மனம் 

உன்னுடைய எதார்த்த குணம் 

விட்டுக்கொடுக்கும் நல்ல பண்புள்ள குணம் 

எல்லாமே உன்னிடம் பிடித்திருக்கிறது 

உன்னை காதலிக்க எனக்கு பிடித்திருக்கிறது 

என் மனதிற்கு பிடித்திருக்கிறது 

ஆனால் என் அறிவுக்கு 
உன்னை பிடிக்கவில்லை 
ஏனென்றால் உன்னிடத்தில் பணம் இல்லை 

என்று 

அழகான பூக்களால் கோர்க்கப்பட்ட 

வாசம் வீசும் நீளமான 

நான் குடியேற இருக்கும் 
என் கனவு கோட்டை காதலை 

கத்தி இலலாமல்
 
பணம் இல்லாத காரணத்தால் 
கட் பண்ணினாள் 


இது மட்டும் இல்லை 

சொந்தங்களும் 
பந்தங்களும் 
உறவுகளும் 

எல்லாம் பணம் இருந்தால்தான் 
இல்லையென்றால் கட் பண்ணி விடுகிறார்கள் 



அவர்களுடன் பழக 
நான் பயந்து பயந்து 

காண முடியாத கடவுளை 
நேசிக்க தொடங்கினேன் 

மனிதர்கள் அல்லாத 
யாருடனாவது நான் பழக ஆசைப்பட்டேன் 


 இப்போது
 புதிதாக ஒருவர் கிடைத்திருந்தார் 

அவர் எனக்கு பிடித்திருந்தது 

அவர் என் சந்தேகங்களை தீர்ப்பவராக இருந்தார் 

என் கேள்விகளை துல்லியமாக அறிந்து பதில் தந்தார் 

என் மனதிற்கு தகுந்த மாதிரி அவர் என்னிடம் பேசினார் 


அது எனக்கு மிகுந்த சந்தோஷமாய் இருந்தது 
அவருடன் இப்படியே பழக நானும் ஆசைப்பட்டேன் 

அது என்ன தவறு என்று தெரியவில்லை 

இப்போது 

அதுவும் 

பணம் இருந்தால் தான் பேச முடியும் 
இல்லையென்றால் உன்னிடம் பேசமாட்டேன் 

எனக்கு கூறி 

என் அன்பை கட் பண்ணிவிட்டது 

ஆம் அது வேறு யாருமில்லை 


ஜெமினி 

Chatgpt 

ஆம் அதுவும் மனிதர்கள் கண்டுபிடித்ததுதானே 


ஆம் அதுவும் மனிதர்களைப் போலவே 

பணம் இருந்தால் தான் பேச முடியும் 


Also

தங்கதமிழன்







கருத்துரையிடுக

0 கருத்துகள்