தங்கத்தமிழன்|கவிதைகள்
![]() |
| நல்லவன் என்றாலே... |
பொய் பேசறவன்,
ஏமாத்தறவன்,
திருடறவன்,
கொள்ளையடிப்பவன்,
கொலை செய்பவன்,
நிறைந்திருக்கிற ஊரிலே,
யாருக்கும் எந்த நீங்கும்
செய்யாத
நல்லவன் என்றால்?
சிரிக்கத்தான்
செய்வார்கள்
எப்படி
நம்புவார்கள்!
ஊரே மோசமாயிருக்கும்
போது
அவனை மட்டும்
நல்லவனா?
எப்படி
ஏற்றுக்கொள்வார்கள்!
ஏற்றுக்கொள்ளவில்லை
என்றால் கூட
பரவாயில்லை,?
பைத்தியம் என்றார்கள்
அதைவிட கொடுமை
இளிச்சவாயன் என்றார்கள்!
இங்கே
நல்லவனுக்கு
இன்னொரு பேருண்டு
இளிச்சவாயன்!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக