Header Ads Widget

Responsive Advertisement

வெற்றி கதைகள்: ரஜினியின் அசைக்க முடியாத இமாலய வெற்றி – உழைப்பா, விதியா, அல்லது அதிசயப் பிறவியா?

 வெற்றி கதைகள்: ரஜினியின் அசைக்க முடியாத இமாலய வெற்றி – உழைப்பா, விதியா, அல்லது அதிசயப் பிறவியா?

ரஜினி நடித்த ஜெயிலர் 2



நமது வலைதளப் பக்கத்தின் 'வெற்றி கதைகள்' பகுதியில், இன்று நாம் காணவிருக்கும் கட்டுரை தமிழ் திரையுலகின் மாபெரும் ஆளுமையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அரிய சாதனைகளைப் பற்றியது ஆகும்.

உலகில் சிலர் எப்போதும் வெற்றியாளர்களாகவே இருப்பார்கள். அவர்களைப் பார்த்து இந்த உலகம் "அவர்கள் ஒரு பிறவி அதிசயப் பிறவி" என்று சொல்லும். அப்படிப்பட்டவர்கள் நூறாண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள் என்றும் கூறுவார்கள். அந்த வரிசையில் ஜெயலலிதா, கலைஞர், எம்.ஜி.ஆர், மற்றும் குறிப்பாகத் திரைத்துறையில் ரஜினி, கமல்ஹாசன் போன்றோரை நாம் குறிப்பிடலாம்.

திரைத்துறையில் ஒரு இடத்தை அடைவது கடினம் என்றால், அந்த இடத்தை நிரந்தரமாகப் பல தசாப்தங்களாகத் தக்கவைப்பது என்பது எத்தகைய போராட்டம்? இது முழுக்க முழுக்க மனிதனின் கடுமையான உழைப்பா அல்லது நமது விதி மற்றும் கிரகங்களின் படி நடக்கக்கூடிய அதிசயமா? இந்தச் சிந்தனையை மையமாகக் கொண்டு இக்கட்டுரையைப் பார்க்கிறோம்.

ஜெயிலர் 2 மற்றும் ரஜினியின் அசைக்க முடியாத சகாப்தம்

சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக உருவான 'ஜெயிலர் 2' படம் மிகப்பெரிய ஹிட் ஆனதாகச் சமூக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் படங்களை யாராலும் வீழ்த்த முடியாது என்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளது.

சுமார் 51 ஆண்டுகாலத் திரைத்துறையில் தன்னை யாராலும் வீழ்த்த முடியாத அளவிற்குத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே வருவது ஒரு இமாலய வெற்றியாகும். ரஜினிகாந்த் அவர்களின் எத்தனையோ படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், 76 வயதில் இவ்வளவு பெரிய மெகா வெற்றியைத் தர முடியுமா என்பது நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. "ரஜினி, ரஜினிகாந்த்" என்று உலகமே பேசும் இந்தச் சாதனையின் பின்னணியில் இருப்பது என்ன?

திரைத்துறையும் ரஜினியின் கடின உழைப்பும்

திரைத்துறைக்கு முதன்முதலில் நுழையும்போது வில்லனாக அறிமுகமானவர் ரஜினி. காலப்போக்கில் அவர் ஹீரோவாக உருவெடுத்து, ஒரு பெரிய 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை அடைந்து, அதை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பது ஒரு மிகப்பெரிய ஆச்சரியமும் அவருடைய முகத்தான சாதனையும் ஆகும்.

  • உழைப்பு மட்டுமே முக்கியமா? அல்லது "அதிசய பிறவி" என்று மக்கள் கூறுவதன் வெளிப்பாடுகளா இந்தத் தொடர் வெற்றிகள்?
  • அவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக, அவருடைய கனவுகள் எளிதில் நிறைவேறிவிடவில்லை. எண்ணற்ற சிரமங்களைச் சந்தித்திருக்கிறார்.
  • "எடுத்த உடனே விதிகளின் படியோ, நேரத்தின் படியோ அவர் வென்றுவிட்டார்" என்று எளிதாகச் சொல்லிவிட முடியாது. திரைத்துறையில் சாதிப்பதற்காக அவர் பட்ட கஷ்டங்களை அவரே பல பேட்டிகளில் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டதைக் கேட்கும்போது நமது மனமே பாரமாகிவிடும். அந்தத் துயரங்களையும் அவமானங்களையும் தாங்கிக்கொண்டுதான் அவர் இந்த உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

ஸ்டைல் நாயகனும் காலத்தின் சோதனைகளும்

தனது தனித்துவமான ஸ்டைலால் ரசிகர்களை என்றென்றும் ஈர்த்து வைத்திருந்தாலும், ரஜினியின் சில படங்களும் தோல்விகளைச் சந்தித்திருக்கின்றன.

கிரிக்கெட் விளையாட்டில் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே வீரர்களால் சிறப்பாக விளையாட முடியும். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவர்களால் பந்துகளைச் சிக்சர் அடிக்க முடியாமல் போகும்போது, வயோதிகம் அல்லது உடல் தகுதி காரணமாக அவர்கள் அந்த விளையாட்டிலிருந்து ஒதுங்கிவிடுகிறார்கள். சினிமா உலகத்தைப் பொறுத்தவரையிலும் அப்படித்தான் என்று பலரும் நினைக்கலாம். எல்லாரும் எல்லா காலங்களிலும் வெற்றி நாயகர்களாக இருக்க முடியாது. குறிப்பிட்ட இளவயது காலங்களில், அழகாக நடனமாடும் காலங்களில் மட்டுமே ஒரு நடிகருக்குச் சந்தை (Market) இருக்கும் என்று கருதப்படும்.

ஆனால், ரஜினியைப் பொருத்தவரை இன்றைக்கும் அந்தச் சந்தையைத் தன் வசம் தக்கவைத்துக்கொண்டு, இந்த 76 வயதிலும் ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைத் கொடுக்க முடிகிறது என்றால், இந்த இடத்திற்கு வர அவர் எத்தகைய கடுமையான உழைப்பைச் செலுத்தியிருக்க வேண்டும்? இது வெறும் உழைப்புதானா அல்லது இதன் பின்னால் விதியின் சூழ்ச்சிகளும் இணைந்திருக்கிறதா?

மற்றவர்களின் வெற்றியும் ரஜினியின் தனித்துவமும்

சினிமாவைச் பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு நாளில் பிரபலமாகிறார்கள்; ஏதோ ஒரு படம் அவர்களுக்கு மிகப்பெரிய ஹிட் ஆகிறது. ஆனால், அதற்குப் பிறகு அவர்களுக்கு வரும் படங்கள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்துவிடுகின்றன.

  • இது அவர்களுக்குத் தொடர் முயற்சி இல்லாததற்குக் காரணமா?
  • அல்லது அவர்கள் அன்றைய விதிமுறையின் பலன்களைச் சுவைத்துவிட்டு விலகிவிட்டார்களா?

சினிமாவில் எத்தனையோ புதுமுகங்கள், லட்சக்கணக்கான நாயகர்கள் வந்து போகிறார்கள். ஓரிரு படங்களில் நடித்துவிட்டுப் பிரபலமாகும் இவர்கள், சில படங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். இன்னும் சிலரோ ஐந்தாறு படங்கள் ஜெயித்தாலும், போகப் போக மார்க்கெட் இல்லாமல் போய்விடுகிறார்கள்.

ஆனால், ஒரே இடத்தில் தொடர்ந்து அசைக்க முடியாமல் நிற்பது அவருடைய உழைப்பாலா, முயற்சியாலா, அல்லது விதியின் நேரடியாக்கிய செயலா? இந்த வினாக்களுக்கு விடை தேடி நான் பல ஆண்டுகளாக இதைப் பற்றி ஆராய்ந்து வருகிறேன். ஆனாலும், இன்னும் தெளிவான ஒரு முடிவுக்கு என்னால் வர முடியவில்லை.

முடிவுரை

எப்படியிருப்பினும், மனிதனின் தீவிர முயற்சிக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப, விதியின் சூட்சமமும் அவர்களுக்குக் கதவுகளைத் திறந்துகொண்டே இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். என்றாலும், இது போன்ற பல நிகழ்வுகளை ஆழமாக ஆராய்ந்து, ஒரு நாள் இதற்கான முழுமையான உண்மையை நாம் கண்டறிய முடியும்!




மேலும் படிக்க: ஆயுத பூஜை அதிரடி ஆஃபர் மேலும் கட்டுரைகள் படிக்க

கருத்துரையிடுக

0 கருத்துகள்