Header Ads Widget

Responsive Advertisement

நீங்கள் மனிதர்களா? உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்யும் காம மிருகம் வாழ்வியல் சிந்தனை!


 

இன்றைய நவீனச் சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக நாள்தோறும் ஏராளமான குற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஊடகங்கள் வாயிலாக வெளியில் வந்து நமக்குப் தெரியவரும் குற்றங்கள் ஆயிரம் எனில், சமூகப் பயத்தினாலும் குடும்பச் சூழலாலும் வெளியில் வராமல் முடக்கப்படும் கொடூரங்கள் ஆயிரத்திற்கும் மேல் இருக்கின்றன.

Kama mirugam short film
நீங்கள் மனிதர்களா? கேள்வி எழுப்பும் குறும்படத்தின் புகைபடம்


அப்படியே ஏதேனும் ஒரு குற்றச் சம்பவம் வெளியில் வந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய தண்டனைகள் கிடைப்பதில் மிகப்பெரிய கால தாமதம் ஏற்படுகிறது. இந்தத் தாமதமே, தவறு செய்யும் ஆண்களுக்குள் இருக்கும் பயத்தை நீக்கி, மீண்டும் மீண்டும் குற்றங்கள் புரிவதற்கு ஒரு தவறான உந்துதலாய் அமைந்துவிடுகிறது.

1. தனிமையில் ஒரு பெண்: உங்கள் மனிதத்தன்மையைச் சோதிக்கும் தருணம்

  • காம மிருகம் என்ற படைப்பு மனிதர்களின் அக உலகத்தைப் பரிசோதிக்கும் ஒரு உன்னதமான வாழ்வியல் கண்ணாடியாகும். இந்தச் சமூகம் நமக்குக் கற்றுத் தந்த ஒழுக்கப் பண்புகள் உண்மையானவையா என்பதைச் சோதித்துப் பார்க்க ஒரு எளிய தத்துவம் உண்டு. கேட்ப்பாரும் பார்ப்பாரும் யாரும் இல்லாத ஒரு தனிமையான இடத்தில், பாதுகாப்பற்ற நிலையில் ஒரு பெண் உங்களிடம் அகப்படும்போது நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?

• உண்மையான நல்லவர்: சட்டத்திற்கும் மனிதர்களுக்கும் பயந்து காட்டும் ஒழுக்கம் உண்மையானது அல்ல. யாரும் இல்லாத தனிமையிலும் ஒரு பெண்ணைத் தன் தாயாகவோ, சகோதரியாகவோ மதித்து அவளுக்குப் பாதுகாப்பாக நிற்பவனே உண்மையான நல்ல மனிதன்.

• மறைந்திருக்கும் மிருகம்: வெளியில் நல்லவன் போல நடித்துவிட்டு, தனக்கான வாய்ப்பும் தனிமையும் கிடைக்கும்போது தன் வக்கிரப் புத்தியைக் காட்டும் ஒருவன் மனித வடிவில் வாழும் கொடிய மிருகம் ஆவான்.

2. பெண்களின் வாழ்வியலைப் பேசும் உயிரோட்டமுள்ள வசனங்கள்




இத்திரைப்படத்தின் ஆழத்தில் இருக்கும் இறுதிக்காட்சி வசனங்கள், பார்ப்பவர் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கி உயிரோட்டம் உள்ளதாக மாற்றுகின்றன. அநீதி இழைக்க வரும் ஆண்களைப் பார்த்து, "அனுமதி இல்லாமல் ஒரு பெண்ணைத் தொட நினைப்பவன் தன் வீட்டில் உள்ள பெண்களைக் கூட்டிக் கொடுத்துவிட்டான் என்று கடவுளின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது" என்று சாட்டையடி வசனம் பேசும்போது, அங்கே வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் தங்களின் தவறுகளை உணர்ந்து நடுங்குகிறார்கள்.

இது வெறும் சினிமா வசனம் அல்ல; பெண்களின் வாழ்வுக்கும், அவர்களின் சுயமரியாதைக்கும் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகச் சமூகத்தின் முன் வைக்கப்படும் ஒரு தத்துவார்த்தக் கேள்வியாகும்.

முடிவுரை: பெண்ணியத்தைப் போற்றுவோம்

காம மிருகமாக அலைபவர்களை நோக்கி, "ஒரு அப்பனுக்குப் பிறந்து, சோற்றைத் தின்னும் உண்மையான ஆம்பளையாக இருந்தால் என்னை விட்டு விலகிச் செல்" என்று ஒரு பெண் கம்பீரமாக முழங்கும்போது அங்கே பெண்ணியம் வெல்கிறது. இந்த உலகம் வெறும் ஆண்களுக்கானது மட்டுமல்ல; பெண்களின் வாழ்வையும் அவர்களின் சுதந்திரத்தையும் மதிப்பதே ஒரு நல்ல மனிதனுக்கு அழகாகும். எனவே, வக்கிர உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, பெண்களை மதிக்கும் உன்னத மனிதர்களாக வாழ்வோம்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்